/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர் சிறப்பு பூஜைஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர் சிறப்பு பூஜை
ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர் சிறப்பு பூஜை
ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர் சிறப்பு பூஜை
ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர் சிறப்பு பூஜை
ADDED : பிப் 09, 2024 11:46 PM

உடுமலை;உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர் சிறப்பு யாக பூஜைகள் நடந்தது.
உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வில் வெற்றி பெறவும், அதிக மதிப்பெண்கள் பெறவும் கல்விக்கடவுளான லட்சுமி ஹயக்கிரீவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள லட்சுமி ஹயக்கிரீவருக்கு, சிறப்பு யாக பூஜைகள் நடந்தன.
நேற்று காலை, காலை, 9:00 மணி முதல், யாக பூஜை, பல்வேறு திரவியங்களில் லட்சுமி ஹயக்கிரீவருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, மாணவர்களுக்கு சங்கல்பம் நடந்தது.
மாணவர்களுக்கு, பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட, எழுது பொருட்கள், கல்வி உபகரணங்கள், பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.