பழனிசாமி விலக பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
பழனிசாமி விலக பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
பழனிசாமி விலக பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
ADDED : பிப் 10, 2024 12:23 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் நடந்த அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனை கூட்டத்தில் பன்னீர்செல்வம் பேசியதாவது:
அ.தி.மு.க.,வில் தவறான வரலாறை பழனிசாமி உருவாக்கியுள்ளார். தொண்டர்கள் தான் பொதுச்செயலரை தேர்வு செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. அதை மீறி, அவர்களுக்கு துரோகம் செய்துள்ள, பொதுச்செயலர் என கூறும் பழனிசாமி தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இல்லையெனில், தொண்டர்களுடன் அவரை விரட்டுவோம். எந்த தியாகமும் செய்யாமல் நான் தான் பொதுச்செயலர், எதிர்க்கட்சி தலைவர் என பழனிசாமி பதவி வெறி பிடித்துள்ளார். அவர் கட்சி பொறுப்பிற்கு வந்தது முதல், ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறவில்லை.
கட்சிக் கொடி, சின்னம் தொடர்பாக உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் கூறியபடி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.