தமிழக எம்.பி.,க்கள் கொத்தடிமைகள்: அண்ணாமலை தாக்கு
தமிழக எம்.பி.,க்கள் கொத்தடிமைகள்: அண்ணாமலை தாக்கு
தமிழக எம்.பி.,க்கள் கொத்தடிமைகள்: அண்ணாமலை தாக்கு
UPDATED : ஜூன் 26, 2024 05:23 PM
ADDED : ஜூன் 26, 2024 12:27 PM

சென்னை: ‛‛பார்லிமென்டில் பதவி ஏற்கும்போது ‛‛ஸ்டாலின் வாழ்க, உதயநிதி வாழ்க'' என கோஷமிட்ட தமிழக எம்.பி.,க்கள் கொத்தடிமைகள்'' என நிருபர்கள் சந்திப்பில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
பார்லிமென்டில் பதவியேற்கும் போது, ஸ்டாலின் வாழ்க, உதயநிதி வாழ்க என கோஷங்களை எழுப்பி தமிழக எம்.பி.,க்கள் உறுதிமொழி வாசித்து பதவி ஏற்றுக் கொண்டனர் என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அண்ணாமலை கூறியதாவது: திமுக எம்பிக்கள் கொத்தடிமைகள். நாங்கள் எங்களால் முடிந்ததை செய்கிறோம். திமுக தவறு செய்யும் போது மக்கள் விழித்துப் பார்க்க வேண்டும். மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.
தி.மு.க ஆட்சியில் சட்ட ஒழுங்கு மோசம் அடைந்து விட்டது. மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எங்கள் பணிகளை செய்து கொண்டு இருக்கிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.