கள்ளச்சாராய விவகாரம்: இதுவரை 1800 லிட்டர் மெத்தனாலை பறிமுதல் செய்த சிபிசிஐடி
கள்ளச்சாராய விவகாரம்: இதுவரை 1800 லிட்டர் மெத்தனாலை பறிமுதல் செய்த சிபிசிஐடி
கள்ளச்சாராய விவகாரம்: இதுவரை 1800 லிட்டர் மெத்தனாலை பறிமுதல் செய்த சிபிசிஐடி
UPDATED : ஜூன் 26, 2024 12:45 PM
ADDED : ஜூன் 26, 2024 12:11 PM

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்திவரும் சிபிசிஐடி, இதுவரை 1800 லிட்டர் மெத்தனாலை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உள்ளது. 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. கள்ளச்சாராயம் தொடர்பாக கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், சின்னதுரை, மாதேஷ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் நடத்திய சோதனையில் இதுவரை 1800 லிட்டர் மெத்தனாலை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம் தனித்தனியாக வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.
வாக்குமூலம் பெறும் பணியில் 50க்கும் மேற்பட்ட சிபிசிஐடி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கில் கோவிந்தராஜ், சின்னதுரை, மாதேஷ், ஜோசப் உள்ளிட்ட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. இதற்கு அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளது.