உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு எதிரான மனு: வாபஸ் பெற்றார் கெஜ்ரிவால்
உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு எதிரான மனு: வாபஸ் பெற்றார் கெஜ்ரிவால்
உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு எதிரான மனு: வாபஸ் பெற்றார் கெஜ்ரிவால்
UPDATED : ஜூன் 26, 2024 01:00 PM
ADDED : ஜூன் 26, 2024 12:15 PM

புதுடில்லி: உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை டில்லி முதல்வர் கெஜ்ரிவால் திரும்பப் பெற்றார்.
மதுபான கொள்கை ஊழல் தொடர்பான பண மோசடி வழக்கில், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மார்ச் 21ல் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக, ஜூன் 1ம் தேதி வரை அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி, மே 10ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜூன் 2ல் திஹார் சிறையில் சரணடைந்தார்.
ஜாமின் கோரி, டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில், கெஜ்ரிவால் தரப்பில் தாக்கல் செய்த மனுவை கடந்த 20ல் விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுதிர் குமார் ஜெயின் தலைமையிலான விடுமுறை கால அமர்வு ஜூன் 21ம் தேதி ஜாமின் உத்தரவுக்கு தடை விதித்து.
ஜாமின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் தரப்பில் அப்பீல் மனு செய்யப்பட்டது. இன்று(ஜூன் 26) உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை டில்லி முதல்வர் கெஜ்ரிவால் திரும்பப் பெற்றார்.
கெஜ்ரிவாலுக்கு உடல் நலக்குறைவு
நீதிமன்றம் அழைத்து செல்லப்பட்ட டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.