/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பூத்துக்குலுங்கும் எள்: விவசாயிகள் மகிழ்ச்சிபூத்துக்குலுங்கும் எள்: விவசாயிகள் மகிழ்ச்சி
பூத்துக்குலுங்கும் எள்: விவசாயிகள் மகிழ்ச்சி
பூத்துக்குலுங்கும் எள்: விவசாயிகள் மகிழ்ச்சி
பூத்துக்குலுங்கும் எள்: விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : பிப் 10, 2024 04:34 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம், சுற்றுப்புற பகுதிகளில் நெல் விதைப்பு செய்யப்படாத வயல்களில் டிச.,ல் விவசாயிகள் எள் விதைப்பு செய்தனர். விதைப்பு செய்யப்பட்ட எள் செடிகள் குறிப்பாக செங்குடி, எட்டியத்திடல், சேத்திடல், வரவணி, வண்டல், பூலாங்குடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் வளர்ச்சி நிலையில் பூக்கள் பூத்து காய்க்கும் நிலையை எட்டி உள்ளன.
எள் செடிகளை பொறுத்த வரை லேசான ஈரப்பதத்திலும், வறட்சியிலும் மகசூல் கொடுக்கக்கூடிய தன்மை வாய்ந்தது என்பதால் தற்போது நிலவி வரும் சீதோஷ்ண நிலை எள் செடிகளுக்கு ஏற்றதாக அமைந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
நெல் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் விவசாயிகள் உழவு செய்து எள் விதைப்பு செய்யும் பணியிலும் தற்போது ஆர்வம் காட்டுகின்றனர்.