சைபர் கிரைம் சார்பில் விழிப்புணர்வு பேரணி
ஈரோடு: சைபர் கிரைம் குற்றம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ஈரோட்டில் பேரணி நடந்தது. அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் துவங்கிய பேரணி, எஸ்.பி., அலுவலகத்தில் நிறைவு செய்தனர். சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். எஸ்.பி., ஜவகர் பேரணியை துவக்கி வைத்தார்.
தாயின் இறப்புக்கு வராத கணவர் வீட்டைவிட்டு மாயமான பெண்
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம், கற்பகம் லே-அவுட்டை சேர்ந்தவர் முரளிதரன், 68; இவரின் மனைவி ஜெயஸ்ரீ, 55; இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். திருமணமான மகள், அகமதாபாத்தில் கணவருடனும், சென்னையில் பணி செய்யும் இடத்தில் மகனும் வசிக்கின்றனர்.
கோபி நகரவை மகளிர் பள்ளியின் ஆண்டுவிழா
கோபி: கோபி அருகே முருகன்புதுார் நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நேற்று நடந்தது. தலைமை ஆசிரியை சீலாதேவி தலைமை வகித்தார். பாட்டு, இசை, நடனம், குழு நடனம், நாட்டுப்புற நடனம் என பல்வேறு கலை நிகழ்ச்சியில் மாணவியர் அசத்தினர். பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் ராஜேந்திரன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.
கோர்ட்டில் யுவராஜ் ஆஜர்
பவானி: கோகுல்ராஜ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் யுவராஜ் மீது, ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதில் ஆஜர்படுத்த, கோவை மத்திய சிறையில் இருந்து, யுவராஜ் நேற்று அழைத்து வரப்பட்டார். ஆனால், மகிளா கோர்ட் நீதிபதி விடுமுறை என்பதால், பவானி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு ஆஜரான பிறகு, கோவைக்கு மீண்டும் அழைத்து செல்லப்பட்டார்.