விவசாயம் - பால் உற்பத்தி கண்காட்சி
விவசாயம் - பால் உற்பத்தி கண்காட்சி
விவசாயம் - பால் உற்பத்தி கண்காட்சி
ADDED : பிப் 10, 2024 10:37 AM
ஈரோடு: யுனைடெட் டிரேட் பேர்ஸ் இந்தியா சார்பில், விவசாயம் மற்றும் பால் உற்பத்தி பொருள் கண்காட்சி, ஈரோட்டில் பரிமளம் மஹாலில், நேற்று தொடங்கியது. இன்று மற்றும் நாளை, காலை, 10:௦௦ மணி முதல் இரவு, 7:௦௦ மணி வரை நடக்கிறது.
இதுகுறித்து கண்காட்சி நிர்வாக இயக்குனர் பாக்யராஜ் கூறியதாவது: தற்போது சந்தையில் இருக்கும் நவீன வேளாண் தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்த முடியும் என்பதை தெரிவிப்பதே இக்கண்காட்சியின் நோக்கம். கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள நுாற்றுக்கணக்கான கடைகளில் தொழில்நுட்ப அறை, பவர் டில்லர்ஸ், சோலார் மோட்டார், பம்புகள், பைப், சொட்டு நீர்ப்பாசன அமைப்பு, அறுவடை எந்திரம் உட்பட பல வேளாண்மை சார்ந்த தொழிற்நுட்ப சாதனங்கள் இடம் பெறுகின்றன.
விவசாயம் மற்றும் பால் உற்பத்தி சார்ந்த இக்கண்காட்சியில்,வேளாண்மை சார்ந்த தொழில்நுட்ப சாதனங்கள் தொடங்கி விதை, உரங்கள் என அனைத்தும் இடம் பெற்றுள்ளன. கண்காட்சிக்கு அனுமதி இலவசம். இவ்வாறு அவர் கூறினார்.