ADDED : பிப் 10, 2024 10:38 AM
ஈரோடு: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், மாதாபுரத்தை சேர்ந்தவர் செல்வம், 40; பெயிண்டரான இவர், ஈரோடு எஸ்.கே.சி., சாலையில் ராஜாமணி வீட்டில், ரோலிங் பிரஷ் மூலம், நேற்று மதியம் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது மின் கம்பியில் பிரஷ் பட்டு, மின்சாரம் தாக்கி செல்வம் துாக்கி வீசப்பட்டார். அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், டாக்டர் பரிசோதனையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் விசாரிக்கின்றனர்.