வரும் 31க்குள் முதலீடு செய்தால் மகளிர் சேமிப்பு திட்டத்தில் 40% வரை பணம் எடுக்கலாம்
வரும் 31க்குள் முதலீடு செய்தால் மகளிர் சேமிப்பு திட்டத்தில் 40% வரை பணம் எடுக்கலாம்
வரும் 31க்குள் முதலீடு செய்தால் மகளிர் சேமிப்பு திட்டத்தில் 40% வரை பணம் எடுக்கலாம்
ADDED : மார் 25, 2025 06:19 AM

புதுடில்லி: மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில், 40 சதவீதம் வரை பணத்தை திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதியை, தபால் துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
நம் நாட்டில், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்காக, கடந்த 2023 ஏப்., 1-ல் 'மகிளா சம்மான் சேமிப்பு' திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. அதன்படி, 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், குறைந்தது, 1,000 ரூபாயில் இருந்து 2 லட்சம் வரை வைப்பு நிதியாக முதலீடு செய்யலாம். மாதந்தோறும், 1,000 ரூபாய் வீதமாகவும் பணம் செலுத்தலாம். மொத்தமாக 2 லட்சமும் முதலீடு செய்யலாம்.
அதற்கு, ஆண்டுக்கு 7.5 சதவீதம் நிலையான வட்டி; அதுவும் காலாண்டுக்கு ஒருமுறை கணக்கிட்டு வழங்கப்படும். குறிப்பிட்ட வங்கிகள், தபால் அலுவலகங்களில் முதலீடு செய்யலாம். பொருளாதார ரீதியாக பெண்களுக்கு உதவுவதற்காக இந்த திட்டம் துவங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த சேமிப்பு திட்டத்தில் போடும் வைப்பு நிதியில் இருந்து 40 சதவீதம் வரை பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதியை தபால் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. வரும், 31ம் தேதிக்கு முன் முதலீடு செய்பவர்களுக்கு மட்டும் இந்த சலுகை கிடைக்கும். தபால் துறை ஊழியர்கள் பயன்படுத்தும் டிஜிட்டல் பேங்கிங் முறையில் பணம் எடுக்கும் இந்த திட்டமானது, கடந்த 7-ம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தபால் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.