சர்வேயர் கோரிக்கைக்கு வி.ஏ.ஓ.,க்கள் கண்டனம்
சர்வேயர் கோரிக்கைக்கு வி.ஏ.ஓ.,க்கள் கண்டனம்
சர்வேயர் கோரிக்கைக்கு வி.ஏ.ஓ.,க்கள் கண்டனம்
ADDED : பிப் 09, 2024 09:18 PM
சென்னை:'பட்டா மாறுதல் உட்பிரிவு கோப்புகளை கையாளும் பொறுப்பை, தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்' என்ற நில அளவைத்துறை அலுவலர்கள் கோரிக்கைக்கு, கிராம நிர்வாக அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நில அளவைத்துறை அலுவலர் சங்கம், 'கிராம நிர்வாக அலுவலர்கள் வசம் உள்ள, பட்டா மாறுதல் உட்பிரிவு கோப்புகளை கையாளும் பொறுப்பை, நில அளவை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளது. இதற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரனிடம் அளிக்கப்பட்டுள்ள மனு:
தமிழக அரசு உத்தரவின்படி, பட்டா மாறுதல் உட்பிரிவு கோப்புகளை, வி.ஏ.ஓ.,க்கள் சிறப்பாக செய்து வருகின்றனர். எனவே, நில அளவைத்துறை அலுவலர் சங்கம் கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்கிறோம். இக்கோரிக்கையை அரசு ஏற்கக் கூடாது.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.