/உள்ளூர் செய்திகள்/சென்னை/114 கட்டுமான திட்டத்திற்கு ஒப்புதல் 30 நாட்களில் வழங்கியது சி.எம்.டி.ஏ.,114 கட்டுமான திட்டத்திற்கு ஒப்புதல் 30 நாட்களில் வழங்கியது சி.எம்.டி.ஏ.,
114 கட்டுமான திட்டத்திற்கு ஒப்புதல் 30 நாட்களில் வழங்கியது சி.எம்.டி.ஏ.,
114 கட்டுமான திட்டத்திற்கு ஒப்புதல் 30 நாட்களில் வழங்கியது சி.எம்.டி.ஏ.,
114 கட்டுமான திட்டத்திற்கு ஒப்புதல் 30 நாட்களில் வழங்கியது சி.எம்.டி.ஏ.,
ADDED : பிப் 10, 2024 12:13 AM
சென்னை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், 'ஆன்லைன்' முறையில் கட்டுமான திட்ட அனுமதி வழங்கும் திட்டம், 2022, மே மாதம் அமலுக்கு வந்தது.
ஆரம்பத்தில் காணப்பட்ட குறைபாடுகள் சரி செய்யப்பட்டு, தற்போது பெரும்பாலான விண்ணப்பங்கள், ஆன்லைன் முறையில் மட்டுமே பெறப்படுகின்றன.
இதில் பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலிக்கும்போது, பல்வேறு துறைகளின் தடையின்மை சான்றுகளை ஆன்லைன் முறையில் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை:
ஆன்லைன் திட்ட அனுமதி முறை அமலுக்கு வந்த நிலையில், சி.எம்.டி.ஏ., வரலாற்றில் முதல் முறையாக, 114 கட்டுமான திட்ட அனுமதி கோப்புகளுக்கு, 30 நாட்களில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மொத்த விண்ணப்பங்களில், 3ல் ஒரு பங்கு விண்ணப்பங்கள், 30 நாட்களில் முடிக்கப்பட்டுள்ளன.
அதிக உயர அடுக்குமாடி கட்டடங்கள் பிரிவில், பொதுவாக ஆண்டுக்கு, 65 விண்ணப்பங்கள் பெறப்படும். ஆனால் தற்போது, ஆண்டுக்கு 135 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 100க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.
அதிக உயரமில்லாத கட்டடங்கள் பிரிவில், 2022ல், 641 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 455 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. இதே பிரிவில், 2023ல், 837 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 605 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்ப பரிசீலனை தொடர்பான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டதால், 30 நாட்களில் ஒப்புதல் வழங்க முடிகிறது. வரும் காலங்களில் அனைத்து விண்ணப்பங்களும் ஆன்லைன் முறையில் பெறப்பட்டு, விரைவாக ஒப்புதல் அளிக்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.