/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/உழவன் செயலியில் பட்டுக்கூடு விலை நிலவரம்உழவன் செயலியில் பட்டுக்கூடு விலை நிலவரம்
உழவன் செயலியில் பட்டுக்கூடு விலை நிலவரம்
உழவன் செயலியில் பட்டுக்கூடு விலை நிலவரம்
உழவன் செயலியில் பட்டுக்கூடு விலை நிலவரம்
ADDED : பிப் 10, 2024 12:38 AM
பொங்கலுார்;விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உழவன் செயலி உருவாக்கப்பட்டது.
அதில், வானிலை, சந்தை விலை நிலவரம், மானிய திட்டங்கள், பயிர் காப்பீடு, விதை இருப்பு, சந்தை விலை, பட்டுக்கூடு விலை நிலவரம், அணை நீர்மட்டம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை விவசாயிகள் அன்றாடம் தெரிந்து கொள்ள இயலும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
தமிழகத்தில் கணிசமான பட்டு விவசாயிகள் பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு ஊரிலும் அன்றாட விலை நிலவரங்களை தெரிந்து கொண்டு, விவசாயிகள் பட்டு கூடு விற்பனை செய்ய உதவியாக இருந்தது. ஆனால், கடந்த ஓராண்டுக்கும் மேலாக உழவன் செயலியில் பட்டுக்கூடு விலை நிலவரம் மட்டும் தெரியாமல் இருந்தது.
நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் பட்டுக்கூடு விலை, பட்டு நூல் விலை நிலவரம் 'அப்டேட்' செய்யப்பட்டுள்ளது. இது பட்டு விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.