/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஊக்கத்தொகையை அதிகரிக்கும் வரை போராட்டம்ஊக்கத்தொகையை அதிகரிக்கும் வரை போராட்டம்
ஊக்கத்தொகையை அதிகரிக்கும் வரை போராட்டம்
ஊக்கத்தொகையை அதிகரிக்கும் வரை போராட்டம்
ஊக்கத்தொகையை அதிகரிக்கும் வரை போராட்டம்
திருப்பூர் : செல்போன் நிறுவனங்கள் ஊக்கத்தொகையை அதிகரித்து வழங்கும் வரை, ரீசார்ஜ் செய்வதில்லை என, திருப்பூர் மாவட்ட செல்லுலார் சர்வீஸ் மற்றும் விற்பனையாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவானது.திருப்பூர் மாவட்ட செல்லுலார் சர்வீஸ் மற்றும் விற்பனையாளர்கள் சங்க உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம், மாவட்ட தலைவர் அசோக்குமார் தலைமையில் நடந்தது.
இந்நிலையில், இன்னும் ஊக்கத்தொகையை குறைத்து 3.3 சதவீதம் மட்டுமே வழங்குவதாக அறிவித்துள்ளன. தற்போதைய விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு ஊக்கத் தொகையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்நிறுவனங்கள் ஊக்கத்தொகையை குறைத்துள்ளன.திருப்பூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் செல்போன் ரீசார்ஜ் கடைகள் கடந்த 13ம் தேதி அடைக்கப்பட்டு, ப்ரீ பெய்டு சேவைகளுக்கு ரீசார்ஜ் செய்யாமல் போராட்டம் நடந்து வருகிறது. தொடர்ந்து ரீசார்ஜ் செய்வ தில்லை என முடிவு செய்யப்பட்டது. இப்பிரச்னைகளுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தீர்வு காணும் வரை இந்த ப்ரீ பெய்டு சேவைக்கு ரீசார்ஜ் செய்வதில்லை; ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட அடுத்த போராட்டம் நடத்துவது எனவும் கூட்டத்தில் முடிவானது.