ADDED : பிப் 09, 2024 08:23 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட திட்டக்குழு கூட்டம், கலெக்டர் பிரபுசங்கர் முன்னிலையில் நடந்தது. கைத்தறித்துறை அமைச்சர் காந்தி தலைமை வகித்து, அரசு திட்டங்கள் குறித்து, துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்பு அவர் பேசுகையில், மாவட்ட கவுன்சிலர்கள், தங்களது பகுதியில் உள்ள குறை மற்றும் தேவைகளை, இந்த குழு வாயிலாக, மக்களுக்கு தேவையான, திட்டங்களை நிறைவேற்றித்தர வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு என்னென்ன தேவை என்று கூட்டத்தின் வாயிலாக, தீர்மானம் நிறைவேற்றி தந்தால், மாவட்ட நிர்வாகம் வாயிலாக பரிசீலனை செய்து நிறைவேற்றப்படும், என்றார்.