/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தீண்டாமை செயலில் ஈடுபட்டால் நடவடிக்கை “:எஸ்.பி., எச்சரிக்கைதீண்டாமை செயலில் ஈடுபட்டால் நடவடிக்கை “:எஸ்.பி., எச்சரிக்கை
தீண்டாமை செயலில் ஈடுபட்டால் நடவடிக்கை “:எஸ்.பி., எச்சரிக்கை
தீண்டாமை செயலில் ஈடுபட்டால் நடவடிக்கை “:எஸ்.பி., எச்சரிக்கை
தீண்டாமை செயலில் ஈடுபட்டால் நடவடிக்கை “:எஸ்.பி., எச்சரிக்கை
ADDED : ஜூலை 17, 2011 01:19 AM
திருப்பூர் : இரட்டை டம்ளர் முறை போன்ற தீண்டாமை செயலில் ஈடுபடுவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என, எஸ்.பி.,எச்சரித்துள்ளார்.எஸ்.பி., பாலகிருஷ்ணன் அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தில், போலீஸ் ஸ்டேசன்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தீண்டாமைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள், டீ கடைகளில் குறிப்பிட்ட சமுதாயத்தினரை புறக்கணித்து இரட்டை டம்ளர் முறை இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சலூன் கடைகளில் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு சிகை அலங்காரம், முகச்சவரம் செய்ய மறுத்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.தீண்டாமை செயல்கள் குறித்து பொதுமக்கள், எஸ்.பி.,யிடம் நேரில் அல்லது தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கலாம். எவ்வித தயக்கமும் இன்றி தகவல் தந்து, திருப்பூர் மாவட்டத்தை தீண்டாமை ஒழிப்பு மாவட்டமாக விளங்க உதவ வேண்டும் என, தெரிவித்துள்ளார்.