/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/வேகத்தடையில் எச்சரிக்கை கோடுகள் அமைப்புவேகத்தடையில் எச்சரிக்கை கோடுகள் அமைப்பு
வேகத்தடையில் எச்சரிக்கை கோடுகள் அமைப்பு
வேகத்தடையில் எச்சரிக்கை கோடுகள் அமைப்பு
வேகத்தடையில் எச்சரிக்கை கோடுகள் அமைப்பு
ADDED : பிப் 09, 2024 10:17 PM

சித்தாமூர்:சித்தாமூர் அருகே பொலம்பாக்கம் கிராமத்தில், மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலையில், விபத்து ஏற்படுவதை தடுக்க, நெடுஞ்சாலைத்துறை வாயிலாக, ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே இரண்டு வேகத்தடைகள் அமைக்கப்பட்டன.
வேகத்தடையில் அமைக்கப்பட்ட எச்சரிக்கை கோடுகள் அழிந்ததால், புதிதாக நெடுஞ்சாலையில் வரும் வாகன ஓட்டிகள், தொடர்ந்து விபத்தில் சிக்கி வந்தனர். எனவே, வேகத்தடைக்கு எச்சரிக்கை கோடு அமைக்க வேண்டும் என, புகார் எழுந்தது.
இந்நிலையில்,, நெடுஞ்சாலைத்துறை வாயிலாக வேகத்தடையில் எச்சரிக்கை கோடுகள் அமைக்கும் பணி நடந்தது.