/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/பர்கூரில் நாளை மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.,வில் இணையும் விழாபர்கூரில் நாளை மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.,வில் இணையும் விழா
பர்கூரில் நாளை மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.,வில் இணையும் விழா
பர்கூரில் நாளை மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.,வில் இணையும் விழா
பர்கூரில் நாளை மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.,வில் இணையும் விழா
ADDED : பிப் 10, 2024 07:37 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:
பர்கூர் அரசு பொறியியல் கல்லுாரி எதிரில், மாற்றுக்கட்சிகளை சேர்ந்த, 10,000க்கும் மேற்பட்டோர், அ.தி.மு.க.,வில் இணையும் விழா நாளை காலை, 10:30 மணிக்கு நடக்கிறது. அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளரும், வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ.,வுமான முனுசாமி தலைமை வகிக்கி உள்ளார்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணரெட்டி முன்னிலை வகிக்கிறார்கள். விழாவில், அ.தி.மு.க., பொதுச்செயலாளரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி முன்னிலையில், மாற்றுக்கட்சிகளை சேர்ந்த, 10,000க்கும் மேற்பட்டவர்கள், அ.தி.மு.க.,வில் இணைகிறார்கள். தொடர்ந்து பழனிசாமி விழா பேருரையாற்றுகிறார். விழாவில், முன்னாள், இன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.