/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/சென்னை - பெங்களூரு சாலையில் மின்விளக்கு பொருத்தும் பணி துவக்கம்சென்னை - பெங்களூரு சாலையில் மின்விளக்கு பொருத்தும் பணி துவக்கம்
சென்னை - பெங்களூரு சாலையில் மின்விளக்கு பொருத்தும் பணி துவக்கம்
சென்னை - பெங்களூரு சாலையில் மின்விளக்கு பொருத்தும் பணி துவக்கம்
சென்னை - பெங்களூரு சாலையில் மின்விளக்கு பொருத்தும் பணி துவக்கம்
ADDED : பிப் 09, 2024 11:10 PM

காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரு தேசிய நான்கு வழி சாலையில் இருந்து, ஆறு வழி சாலையாகவும், 18 இடங்களில் சிறுபாலங்கள் மற்றும் மூன்று இடங்களில் மேம்பால கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
இந்த சாலை விரிவாக்க பணிக்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக, 654 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, சாலை விரிவாக்க பணிகள் மற்றும் மேம்பாலம் கட்டும் பணிகள் ஆங்காங்கே நிறைவு பெற்றுள்ளன.
மேம்பாலத்திற்கும், சாலைக்கும் இணைப்பு ஏற்படுத்தும் பணிகள் முடங்கியுள்ளன. இருப்பினும், சாலையோரம் மின் விளக்கு பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
குறிப்பாக, வெள்ளைகேட், ராஜகுளம் ஆகிய பகுதிகளில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் மின் கம்பங்கள் அமைத்தனர். அதில், மின் விளக்கு பொருத்தாமல் இருந்தனர்.
சமீபத்தில், வெள்ளைகேட் மேம்பாலம், பொன்னேரிக்கரை, ராஜகுளம் ஆகிய பகுதிகளில் சாலை விரிவாக்கம் நிறைவு செய்த பகுதிகளில், மின்விளக்கு பொருத்தும் பணி நடந்து வருகிறது.
இதையடுத்து, மீதமுள்ள இடங்களில் மின் கம்பங்கள் அமைத்து, விளக்குகள் பொருத்திய பின் மின் இணைப்பு வழங்கப்படும் என, சாலை விரிவாக்க பணியாளர்கள் தெரிவித்தனர்.