கிராமப்புற சாலைகள் மேம்பாட்டிற்கு ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின்
கிராமப்புற சாலைகள் மேம்பாட்டிற்கு ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின்
கிராமப்புற சாலைகள் மேம்பாட்டிற்கு ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின்
ADDED : ஜூன் 24, 2024 10:54 AM

சென்னை: 'அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் 10,000 கி.மீ. கிராமப்புற சாலைகள் ரூ.4 ஆயிரம் கோடியில் மேம்படுத்தப்படும்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டசபை 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புகள் வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:
* அடுத்த 2 ஆண்டுகளில் 10,000 கி.மீ. நீளமுள்ள ஊரக சாலைகள் ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
* உள் கட்டமைப்பு வசதிகளை தொடர்ச்சியாக மேம்படுத்தி வருகிறோம்
*நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து வளர்ச்சிகளையும் உள்ளடக்கியதாக திராவிட மாடல் இருந்து வருகிறது.
* 1.38 லட்சம் கி.மீ., தூரத்திற்கு சாலைகள் உள்ளன. சாலை வளர்ச்சி என்பது மிக முக்கியமானது.
* கிராமப்புற மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலைகள் முக்கியமாக இருக்கின்றன.
* ஊரக பகுதி சாலைகள், குக்கிராமங்களை இணைக்கும் சாலைகளை மேம்படுத்தி வருகிறோம். 8,000 கி.மீ.க்கு சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.