இங்கிலாந்து விமான நிலையத்தில் மின்சாரம் "கட்": பயணிகள் அவதி
இங்கிலாந்து விமான நிலையத்தில் மின்சாரம் "கட்": பயணிகள் அவதி
இங்கிலாந்து விமான நிலையத்தில் மின்சாரம் "கட்": பயணிகள் அவதி
ADDED : ஜூன் 24, 2024 10:56 AM

லண்டன்: இங்கிலாந்து விமான நிலையத்தில் ஏற்பட்ட மின் தடை காரணமாக, பயணிகள் அவதி அடைந்தனர். விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
இங்கிலாந்து மான்செஸ்டர் விமான நிலையத்தில் நேற்று (ஜூன் 23) முதலாம், இரண்டாம் முனையங்களில் மின்சாரம் தடைபட்டது. அதனால் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அங்கு தரையிறங்க வேண்டிய சில விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு மாற்றிவிடப்பட்டன. மின் தடை காரணமாக பயணிகள் அவதி அடைந்தனர்.
மூன்றாம் முனையத்திலிருந்து பயணம் செய்யவிருப்போர் நிலையத்திற்கு வழக்கம்போல் வரலாம் எனக் கூறப்பட்டது. காத்திருக்கும் பயணிகளின் விமானங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அப்போது தான் கூட்ட நெரிசலை தடுக்க முடியும் என விமான நிலையம் அறிக்கை வெளியிட்டது. பயணிகள் விமான நிலையத்தில் மின்சாரம் இல்லாததால் கூட்ட நெரிசலில் சிக்கி, அவதியடையும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி உள்ளது.