சென்னை, கோவை விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை, கோவை விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை, கோவை விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : ஜூன் 24, 2024 10:33 AM

சென்னை: கோவை மற்றும் சென்னை விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
சென்னை மற்றும் கோவை விமான நிலையத்திற்கு இன்று(ஜூன் 24) இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. விமான நிலைய கழிவறையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்தது. வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மோப்ப நாய் மூலம் விமான நிலையம் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர்.
பயணிகளின் உடைமைகளும் சோதனை செய்யப்பட்டது. 7வது முறையாக சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து இ-மெயில் அனுப்பிய நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.