பீஹார் குற்றவாளி டில்லியில் சிக்கினான்
பீஹார் குற்றவாளி டில்லியில் சிக்கினான்
பீஹார் குற்றவாளி டில்லியில் சிக்கினான்
ADDED : பிப் 10, 2024 12:56 AM
புதுடில்லி,:பீஹார் மாநில போலீசால் நீண்ட நாட்களாக தேடப்பட்ட பிரபல குற்றவாளி மற்றும் அவரது கூட்டாளியை டில்லி போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தன் ராம், 27. இவர் மீது கொலை, மிரட்டி பணம் பறித்தல், நில அபகரிப்பு உட்பட 25க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பீஹாரின் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் நிலுவையில் உள்ளன.
சந்தன் ராம் குறித்து தகவல் கொடுப்போருக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என பீஹாரின் மோதிஹாரி போலீஸ் அறிவித்து இருந்தது.
இந்நிலையில், சந்தன் ராம் அவரது கூட்டாளி சுந்தர் ஆகிய இருவரையும் டில்லி மாநகரப் போலீசார் நேற்று முன் தினம் இரவு சுற்றிவளைத்தனர். அப்போது, இருவரும் போலீஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். போலீசாரும் பதிலடி கொடுத்து இருவரையும் கைது செய்தனர்.
டில்லியில் தங்கியிருந்த இருவரும் அடிக்கடி நொய்டாவுக்கு சென்று குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிய வந்ததையடுத்து இருவரிடமும் தீவிர விசாரணை நடக்கிறது.