Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/போக்குவரத்து பாதிப்பு

போக்குவரத்து பாதிப்பு

போக்குவரத்து பாதிப்பு

போக்குவரத்து பாதிப்பு

ADDED : ஜூலை 17, 2011 01:10 AM


Google News

வால்பாறை : வால்பாறையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், வாட்டர்பால் எஸ்டேட் அருகே, சாலையில் மரம் விழுந்து, பொள்ளாச்சி - வால்பாறை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வால்பாறையில், தற்போது பெய்து வரும் மழையால், நீராதாரங்கள் உயர்ந்து வருகின்றன. நேற்று காலை, வாட்டர்பால் எஸ்டேட்டில் உள்ள சோலைக்குறுக்கு பகுதி சாலையில், ராட்சத மரம் விழுந்தது; பொள்ளாச்சி- வால்பாறை இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறையினர், பொக்லைன் வாகனம் மூலம், மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேரத்துக்கு பின், மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானது. தாசில்தார் சின்னப்பையன், நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துறை அதிகாரிகள், மீட்டுப் பணிகளை பார்வையிட்டனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us