Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சர்ச்சைக்குரிய அம்மன் கோயில் இடிப்பு

சர்ச்சைக்குரிய அம்மன் கோயில் இடிப்பு

சர்ச்சைக்குரிய அம்மன் கோயில் இடிப்பு

சர்ச்சைக்குரிய அம்மன் கோயில் இடிப்பு

ADDED : ஜூலை 17, 2011 01:02 AM


Google News

தூத்துக்குடி : தூத்துக்குடி, தாளமுத்துநகர் அடுத்த ஜோதிபாசு நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம்.

இவர் வீட்டின் அருகிலேயே காளியம்மன் கோயிலை அமைத்து அதற்கு பூஜை செய்தார். குறி சொல்லியும் வந்தார். இந்நிலையில், ஜூலை 2ம்தேதி இரவு இக்கோயில் கிணற்றில் 3ம்வகுப்பு மாணவன் வேல்ராஜ் மகன் குணசேகர் ராஜா(8), மர்மமான முறையில் இறந்துகிடந்தான். முன்விரோதம் காரணமாக ஆறுமுகம் குடும்பத்தினருடன் சேர்ந்து, இச்சிறுவனை நரபலி கொடுத்து கிணற்றில் வீசியதாக ஊர்க்காரர்கள் குற்றம்சாட்டி இக்கோயிலுக்கு தீ வைத்தனர். கோயிலை இடிக்க வலியுறுத்தி சாலைமறியலும் செய்தனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.



கோயில் இடித்து தரைமட்டம்: இந்நிலையில், அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்ரமித்து கட்டப்பட்ட ஆறுமுகத்திற்கு சொந்தமான சர்ச்சைக்குரிய இந்த காளியம்மன் கோயில் சப்-கலெக்டர் சஜ்ஜன் சிங் ஆர்.சவான், வருவாய்துறை, போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று காலை ஜே.சி.பி., இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. சிறுவன் பிணமாக கிடந்த கிணறை முறையாக பராமரிக்காமல் அஜராக்தையாக இருந்ததாக ஆறுமுகம் மகன் லட்சுமண பாண்டியை தாளமுத்து நகர் போலீசார் கைது செய்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us