/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிதொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : பிப் 10, 2024 06:11 AM
புதுச்சேரி: அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி தனியார் பள்ளியில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, சுகாதார உதவியாளர் கிரி வரவேற்றார். சுகாதார ஆய்வாளர் முனுசாமி தொழுநோய் விழிப்புணர்வின் அவசியம் குறித்து பேசினார்.
தலைமை மருத்துவ அதிகாரி தாரிணி தொழுநோய் பரவும் விதம், அறிகுறிகள், சிகிச்சை முறைகள் குறித்து விளக்கம் அளித்தார். பள்ளியின் நிர்வாகி சித்தார்த் தொழுநோய் ஒழிப்பில் மாணவர்களின் பங்களிப்பு குறித்து பேசினார்.
சுகாதார உதவியாளர் ஜெகதீஸ்வரி நன்றி கூறினார். மாணவர்கள் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.