ADDED : பிப் 10, 2024 05:13 AM
மதுரை: மதுரை புதுார் லுார்தன்னை சர்ச் 104 ம் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு சிவகங்கை மறைமாவட்ட செயலக முதல்வர் மரியடெல்லஸ் தலைமையில் நற்கருணை பவனி நடந்தது. பாதிரியார் ஜார்ஜ், உதவி பாதிரியார்கள் பாக்கியராஜ், யூஜின், ஜஸ்டின் இமானுவேல் முன்னிலை வகித்தனர்.
சர்ச்சில் இருந்து புறப்பட்ட பவனி, மாதா கோயில் மெயின் ரோடு, லுார்தன்னை, ஆர்.சி., பள்ளிகள், அழகர்கோவில் மெயின் ரோடு வழியாக மீண்டும் சர்ச் வந்து நிறைவுற்றது. ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.