ADDED : பிப் 10, 2024 01:33 AM
ராமநாதபுரம்:-இளஞ்செம்பூரில் நகைக்காக பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகாத இன்ஸ்பெக்டர் அல்லிராணிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.
இளஞ்செம்பூர் பகுதியில் 2016ல் நகைக்காக முனியம்மாள் 45, என்பவரை கொலை செய்தனர். இந்த வழக்கை அப்போது எஸ்.ஐ.,யாக இருந்த அல்லிராணி விசாரித்தார். இந்த வழக்கு ராமநாதபுரம் கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதன் விசாரணைக்கு ஆஜராக பல முறை வாய்தா அளித்தும் தற்போது நீலகிரி மாவட்டம் புதுமண்டு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் அல்லிராணி ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி கோபிநாத் நேற்று இன்ஸ்பெக்டர் அல்லிராணிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.