/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வித்யநேத்ரா பள்ளியில் விளையாட்டு விழாவித்யநேத்ரா பள்ளியில் விளையாட்டு விழா
வித்யநேத்ரா பள்ளியில் விளையாட்டு விழா
வித்யநேத்ரா பள்ளியில் விளையாட்டு விழா
வித்யநேத்ரா பள்ளியில் விளையாட்டு விழா
ADDED : பிப் 09, 2024 11:25 PM

உடுமலை;கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா மெட்ரிக் மேல்நிலை மற்றும் சர்வதேச பள்ளிகளில், விளையாட்டு விழா நடந்தது.
உடுமலை அருகே கோமங்கலம்புதுார் வித்ய நேத்ரா மெட்ரிக் மேல்நிலை மற்றும் சர்வதேச பள்ளிகளில் நடந்த விளையாட்டு விழாவில், மாணவி சஹானா வரவேற்றார். தாளாளர் நந்தகோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாணவர்கள் அணிவகுப்பு மரியாதை நடத்தினர். பள்ளி விளையாட்டுதுறை செயலாளர் மாணவர் சிபிஆதவ்குமார் உறுதிமொழி ஏற்க, மற்ற மாணவர்கள் பின் தொடர்ந்தனர்.
மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாணவி மோக்ஷிதா நன்றி தெரிவித்தார். பள்ளி ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பெற்றோர் விழாவில் பங்கேற்றனர்.