Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அருள்புரம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் புதிய தொழில்நுட்பம்

அருள்புரம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் புதிய தொழில்நுட்பம்

அருள்புரம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் புதிய தொழில்நுட்பம்

அருள்புரம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் புதிய தொழில்நுட்பம்

ADDED : ஜூலை 17, 2011 01:17 AM


Google News

திருப்பூர் : புதிய தொழில் நுட்பத்துடன் ஜீரோ டிஸ்சார்ஜ் செய்வதாக அருள்புரம் பொது சுத்திகரிப்பு நிலையம் விண்ணப்பித்திருந்தது.

அதை ஏற்று, சோதனை முறையில் சுத்திகரிப்பு மேற்கொள்வதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம், நிபந்தனையுடன் இசைவாணை வழங்கியுள்ளது. திருப்பூரில் உள்ள 734 சாய சலவை ஆலைகளுக்காக இருபது பொது சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. 152 தனியார் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தை சரிவர செயல்படுத்தாததால், ஐகோர்ட் உத்தரவுபடி அனைத்து சாய, சலவை ஆலைகளும் ஆறுமாதங்களாக மூடப்பட்டுள்ளன. பனியன் தொழில் பாதிக்கப்படுவதால், சாய ஆலைகளை திறக்க அனுமதி கோரப்பட்டது. ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தை செயல்படுத்தும் ஆலைகளை திறக்கலாம் என, கோர்ட் உத்தரவிட்டிருந்தது.



பொதுவாக, சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பில் 'எவாப்பரேட்டர்' பிரில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டன. இதனால், ஜீரோ டிஸ்சார்ஜ் சுத்திகரிப்பு சிரமமாக இருந்தது. இந்நிலையில், அருள்புரம் பொது சுத்தகரிப்பு நிலையம், புதிய தொழில் நுட்பத்தில் ஜீரோ டிஸ்சார்ஜ் சுத்திகரிப்பு செய்வதற்கு மாசுகட்டுப்பாட்டுவாரியத்திடம் அனுமதி வேண்டியிருந்தது. கண்காணிப்பு குழு சோதனை ஓட்டம் நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது.



இது குறித்து மாசுகட்டுப்பாட்டுவாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கண்னண் கூறியதாவது: அருள்புரம் பொது சுத்திகரிப்பு நிலையம் ஆரோ சுத்திகரிப்புக்கு பிறகு மீதமாகும் கழிவுகளை மறு சுத்திகரிப்பு செய்து, அதிலுள்ள கடின தன்மைகளை நீக்கி, உப்புத்தன்மையுடன் மீதமுள்ள கழிவுகளை மறு சுழற்சி முறையில் சாயமிட பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டள்ளன. புதிய தொழில் நுட்பம் குறித்து வாரியத்திடம் விண்ணப்பித்திருந்தது. ஆய்வு மேற்கொண்ட கண்காணிப்பு குழு, புதிய தொழில்நுட்பத்தில் ஜீரோ டிஸ்சார்ஜ் செய்யமுடியும் என்ற நம்பிக்கையில் இசைவாணை வழங்கியுள்ளது. அதற்காக 90 நாட்கள் சோதனை ஓட்டம் நடத்திக்கொள்ள நிபந்தனையுடன் அனுமதிவழங்கியுள்ளது. சோதனை ஓட்டம் வெற்றியடையும் பட்சத்தில், இதே தொழில் நுட்பத்தை செயல்படுத்த முன்வரும் சுத்திகரிப்பு நிலையங்களுக்கும் அனுமதி வழங்கப்பட வாய்ப்புள்ளது, என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us