Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கூட்டுறவு சங்க முறைகேடு 5 முன்னாள் நிர்வாகிகள் கைது

கூட்டுறவு சங்க முறைகேடு 5 முன்னாள் நிர்வாகிகள் கைது

கூட்டுறவு சங்க முறைகேடு 5 முன்னாள் நிர்வாகிகள் கைது

கூட்டுறவு சங்க முறைகேடு 5 முன்னாள் நிர்வாகிகள் கைது

ADDED : பிப் 10, 2024 01:25 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம்,:விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், முந்தைய ஆட்சியில் பல கோடி ரூபாய் கையாடல் நடந்துள்ளதாக, தற்போதைய சங்க உறுப்பினர்கள், சில மாதங்களுக்கு முன், எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர். வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் சங்க செயலராக இருந்த சையத் சாதிக் பாஷா, நிர்வாகக்குழு தலைவர் சாந்தி உள்ளிட்டோர், பொய் கணக்கு எழுதி, 4.50 கோடி மோசடி செய்தது தெரிந்தது.

இதுகுறித்து திண்டிவனம் சரக துணைப்பதிவாளர் சொர்ணலட்சுமி அளித்த புகாரின் படி, வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார், கடந்த 7ம் தேதி வழக்கு பதிந்து, 17 பேரையும் தேடிவந்தனர்.

அதில், வழக்கில் முதல் குற்றவாளியான முன்னாள் செயலர் சையத்சாதிக் பாஷா இறந்துவிட்டது தெரிந்தது. வழக்கில் தொடர்புடைய முன்னாள் நிர்வாக குழு தலைவர் சாந்தி, 50, துணை தலைவர் அருள்மேரி, 45, சங்க ஊழியர்கள் முதுநிலை எழுத்தர் பசுமலை, 55, சிற்றெழுத்தர் முருகன், 48, விற்பனையாளர் விஜயராஜ், 50, ஆகியோரை போலீசார் விழுப்புரத்தில் நேற்று கைது செய்தனர்.

செஞ்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடலுார் மத்திய சிறையில் அவர்களை அடைத்தனர். இன்னும் 11 பேரை போலீசார் தேடுகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us