எந்த சவாலையும் சந்திக்க ஆயுதப்படைகள் தயார்: ராஜ்நாத் உறுதி
எந்த சவாலையும் சந்திக்க ஆயுதப்படைகள் தயார்: ராஜ்நாத் உறுதி
எந்த சவாலையும் சந்திக்க ஆயுதப்படைகள் தயார்: ராஜ்நாத் உறுதி
ADDED : செப் 16, 2025 09:19 PM

கோல்கட்டா: '' உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வீரர்களின் தைரியம் காரணமாக, எந்த சவாலையும் சந்திக்க தயாராக இந்திய ஆயுதப்படைகள் தயாராக இருக்கின்றன, '' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
கோல்கட்டாவில் நடக்கும் முப்படை தளபதிகள் மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: தகவல், கருத்தியல் மற்றும் உயிரியல் போன்ற வழக்கத்துக்கு மாறான அச்சுறுத்தல்களில் இருந்து வெளிப்படும் கண்ணுக்கு தெரியாத சவால்களை சமாளிக்க ஆயுதப்படைகள் தயாராக இருக்க வேண்டும்.
இன்றைய போர்கள் திடிரென ஏற்படுகின்றன. அது கணிக்க முடியாததாக உள்ளது. அது எவ்வளவு காலம் நீடிக்கும் என கணிக்க முடியாததாக இருக்கிறது. அது இரண்டு மாதங்கள, ஓராண்டு மற்றும் ஐந்து ஆண்டுகள் கூட நீடிக்கும். இதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். நமது எழுச்சித் திறன்கள் போதுமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஆப்பரேஷன் சிந்தூர் நமது வலிமை, திட்டமிடல் மற்றும் தன்னிறைவு இந்தியா என்ற மூன்று தூண்களை எடுத்துக்காட்டியதுடன், 21ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வலிமை சேர்ப்பதாக அமைந்தது. தைரியமிக்க நமது வீரர்கள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மூலம் எந்த சவாலையும் சமாளிக்கும் திறன் பெற்றுள்ளோம்.
மற்ற அமைப்புகளுடன் ஆயுதப்படைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இது எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்கு முக்கியமானது.
இவ்வாறு அவர் பேசினார்.