சிறுவனுக்கு 2 ஆண்டாக பாலியல் தொல்லை: அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கைது
சிறுவனுக்கு 2 ஆண்டாக பாலியல் தொல்லை: அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கைது
சிறுவனுக்கு 2 ஆண்டாக பாலியல் தொல்லை: அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கைது
ADDED : செப் 16, 2025 07:56 PM

கண்ணூர் : மொபைல் செயலி மூலம் அறிமுகமான சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த 10 பேரை காசர்கோடு போலீசார் கைது செய்துள்ளனர். அதில், ரயில்வே போலீஸ் அதிகாரி, கல்வி அதிகாரி மற்றும் தொழிலதிபர் உள்ளிட்டோர் அடங்குவர்.
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுவன், பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இச்சிறுவன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மொபைல் போனில், டேட்டிங் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்துள்ளார். இதில், அறிமுகமான சிலர் அச்சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனை யாருக்கும் சிறுவன் சொல்லாமல் இருந்துள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து சந்தேகத்துக்கு இடமான ஒருவர் செல்வதையும், அவரது மொபைல்போனில் சந்தேகத்துக்கு இடமான வகையில் செயல்பாடுகள் இருந்ததையும் அச்சிறுவனின் தாயார் பார்த்துள்ளார்.
இது குறித்து விசாரித்த போது, தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து சிறுவன் குறிப்பிட்டுள்ளார். உடனடியாக அவரது தாயார் போலீசில் புகார் அளித்தார். அவர்கள் குழந்தைகள் நல மையத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சிறுவனுக்கு கவுன்சிலிங் அளித்தனர். அப்போது, சிறுவன் செயலியில் இணைந்தது, பாலியல் தொந்தரவு மற்றும் அதில் ஈடுபட்டது யார் என விளக்கினார். இது குறித்து அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
அப்போது, போக்சோ சட்டம் மற்றும் ஐபிசி 377 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், 10 பேரை கைது செய்துள்ளனர். இவர்களில் ரயில்வே போலீஸ் அதிகாரி, கல்வி அதிகாரி, தொழிலதிபர், உள்ளிட்ட 10 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் தலைமறைவாகி உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, எர்ணாகுளம் ஆகிய பகுதிகளுக்கும் சிறுவனை அழைத்து சென்று அவர்கள் பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள போலீசார், 9 வழக்குகள் காசர்கோடில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் மற்ற வழக்குகள் பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட இடங்களில் உள்ள போலீஸ் ஸ்டேசன்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.