/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கூட்டுறவு பணியாளர்கள் வேலைநிறுத்த எச்சரிக்கைகூட்டுறவு பணியாளர்கள் வேலைநிறுத்த எச்சரிக்கை
கூட்டுறவு பணியாளர்கள் வேலைநிறுத்த எச்சரிக்கை
கூட்டுறவு பணியாளர்கள் வேலைநிறுத்த எச்சரிக்கை
கூட்டுறவு பணியாளர்கள் வேலைநிறுத்த எச்சரிக்கை
ADDED : பிப் 10, 2024 12:25 AM
திருப்பூர்;கூட்டுறவு சங்கம் மற்றும் ரேஷன் கடை பணியாளர்களின் பணி பாதுகாப்பு, இதர பிரச்னைகள் குறித்த ஆலோசனை கூட்டம், அம்மாபாளையத்தில் நடந்தது.
'டாக்பியா' மாவட்ட செயலாளர் பாஷா, சி.ஐ.டி.யு., சங்க மாவட்ட தலைவர் கவுதமன், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் தங்கவேல், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை சங்க மாநில தலைவர் பாலசுப்பிரமணியம், அண்ணா தொழிற்சங்க பொருளாளர் இந்திராகாந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டுறவு பணியாளர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில், அவதுாறு செய்தி பரப்பும் நபர்களை கைது செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணியாளர்களை அச்சுறுத்தி, பணம் பறிக்கும் மோசடி கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும். பெண் பணியாளர்களை குறி வைத்து, ஆளும்கட்சி என்ற பெயரில், பொய் புகார்களை அனுப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணியாளர்களின் பணி பாதுகாப்பு உறுதி செய்யவும், அமைதியான பணி சூழலை ஏற்படுத்தி கொடுக்க கோரியும், சமூக ஆர்வலர் என்ற பெயரில் அராஜகம் செய்வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி, முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர் போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, வரும் 26 ம் தேதி, கலெக்டர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், உரிய தீர்வு கிடைக்காவிட்டால், ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களை பூட்டிவிட்டு, தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.