/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மாநகர அ.தி.மு.க.,வில் மா.செ.,எதிர் கோஷ்டியினர் கை ஓங்கியதுமாநகர அ.தி.மு.க.,வில் மா.செ.,எதிர் கோஷ்டியினர் கை ஓங்கியது
மாநகர அ.தி.மு.க.,வில் மா.செ.,எதிர் கோஷ்டியினர் கை ஓங்கியது
மாநகர அ.தி.மு.க.,வில் மா.செ.,எதிர் கோஷ்டியினர் கை ஓங்கியது
மாநகர அ.தி.மு.க.,வில் மா.செ.,எதிர் கோஷ்டியினர் கை ஓங்கியது
ADDED : பிப் 10, 2024 04:34 PM
ஈரோடு : ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,வில் அணி நிர்வாகிகள் மாற்றத்துடன், மாநகர பகுதி செயலாளர் எண்ணிக்கை ஒன்பதில் இருந்து, 18 ஆக உயர்ந்துள்ளதால், மாவட்ட செயலாளரின் எதிர் கோஷ்டியினர் கை ஓங்கியுள்ளது.
ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளராக, முன்னாள் அமைச்சர் ராமலிங்கம் உள்ளார். மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி என மூன்று சட்டசபை தொகுதிகள் உள்ளன. நேற்று முன்தினம் அக்கட்சி பொது செயலாளர் இ.பி.எஸ்., அறிவிப்பின்படி, மாநகர, மாவட்ட நிர்வாகிகளில் பலர் மாற்றப்பட்டுள்ளனர். இதன்படி ஈரோடு மாநகரில், 60 வார்டுகள் தலா, 5 முதல், 7 வார்டாக பிரித்து, 9 பகுதி செயலாளர்கள் இருந்தனர். தற்போது, 3 முதல், 4 வார்டாக பிரித்து, 18 ஆக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாநகர அ.தி.மு.க.,வினர் கூறியதாவது: மாவட்ட செயலாளர் ராமலிங்கம் ஒரு அணியாகவும், முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு, பகுதி செயலாளர்கள் மனோகரன், கே.சி.பழனிசாமி, சூரம்பட்டி ஜெகதீசன், கோவிந்தராஜ் தனி அணியாகவும் செயல்படுகின்றனர். கடந்த, 2021 சட்டசபை தேர்தல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வு மற்றும் பணி, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவதில் ராமலிங்கம் மீது இ.பி.எஸ்., அதிருப்தியில் உள்ளார்.
அதேநேரம் மாவட்ட செயலாளர் பதவிக்கு தென்னரசு, கே.சி.பழனிசாமி போன்றோர் முயன்று வரும் நிலையில், பகுதி செயலாளர் எண்ணிக்கையை, 18 என உயர்த்தி, தங்கள் ஆதரவாளர்களை நியமித்து கொண்டுள்ளனர். அதுபோல அணி நிர்வாகிகளிலும் சதீஷ்குமார், துரைசேவுகன், சிவகுமார் உட்பட பல பதவிகளை ஆதரவாக வைத்துள்ளனர். ராமலிங்கத்துக்கு எதிரான அணியினர் கை ஓங்குவதால், வரும் நாட்களில் கட்சி மற்றும் தேர்தல் பணிகளில் ஒருங்கிணைப்பு கேள்விக்குறியாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.