Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/'பறவைகளின் சொர்க்கம்' நஞ்சராயன் குளம்! போஸ்டர், கையேடு வெளியீடு

'பறவைகளின் சொர்க்கம்' நஞ்சராயன் குளம்! போஸ்டர், கையேடு வெளியீடு

'பறவைகளின் சொர்க்கம்' நஞ்சராயன் குளம்! போஸ்டர், கையேடு வெளியீடு

'பறவைகளின் சொர்க்கம்' நஞ்சராயன் குளம்! போஸ்டர், கையேடு வெளியீடு

ADDED : பிப் 10, 2024 12:42 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்:'பறவைகளின் சொர்க்கம்' என்ற பெயரில், நஞ்சராயன் குளம் குறித்த போஸ்டர் மற்றும் கையேடு ஆகியவற்றை, வனத்துறை கூடுதல் முதன்மைச்செயலர் சுப்ரியா சாஹூ வெளியிட்டார்.

திருப்பூர் மங்கலம் பகுதியில் மரம் வளர்ப்பு தொடர்பான பணிகளை பார்வையிட, தமிழ்நாடு, காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் முதன்மை செயலர் சுப்ரியா சாஹூ வந்தார். திருப்பூர், நஞ்சராயன் குளம், பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் இயற்கை கழகம் சார்பில் தயாரிக்கப்பட்ட 'போஸ்டர்' மற்றும் கையேடு ஆகியவற்றை, சுப்ரியா சாஹூ வெளியிட்டார்.

திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் பேசுகையில், ''நஞ்சராயன் குளம், பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்படுவதற்கு, கூடுதல் முதன்மை செயலராக பணியாற்றும் சுப்ரியா சாஹூ முக்கிய காரணமாக இருந்தார்; அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்,'' என்றார்.

கூடுதல் முதன்மை செயலர் சுப்ரியா சாஹூ பேசுகையில், ''இயற்கை காக்கும் பணியில் ஈடுபடும் அமைப்பினருக்கு பாராட்டுகள். அதே போன்று, பிற இடங்களில் உள்ள குளங்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும்'' என்றார்.

நிகழ்வில், கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் தீபக் ஸ்ரீவத்சவா, திருப்பூர் மாவட்ட வன அலுவலர் தேவேந்திரகுமார் மீனா, திருப்பூர் ரேஞ்சர் சுரேஷ் கிருஷ்ணா, திருப்பூர் இயற்கை கழக செயலாளர் ராம்குமார், உறுப்பினர்கள் ராஜ்குமார், ராமசாமி, சந்துரு உட்பட வன அலுவலர்கள் பங்கேற்றனர்.

அதிகாரப்பூர்வ அங்கீ காரம் வனத்துறை சார்பில், திருப்பூர் நஞ்சராயன் குளம், பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான முக்கியத்துவத்தை அதிகப்படுத்தவும், மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தவும் ஆர்வம் காட்டப்படுகிறது.

அந்த வகையில், திருப்பூர் வனத்துறை, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் அனுமதியில், 'பாரடைஸ் ஆப் பேர்ட்ஸ்' அதாவது, 'பறவைகளின் சொர்க்கம்' என்ற பெயரில், திருப்பூர் இயற்கை கழகத்தினர் போஸ்டர், கையேடு தயாரித்துள்ளனர்.

'இந்த போஸ்டர் குளத்தின் முகப்பு பகுதியில் வைக்கப்படும்; இதன் வாயிலாக, வனத்துறையின் அங்கீகாரம் பெற்ற குளமாக, இதை பிரபலப்படுத்தவே இந்த ஏற்பாடு' என திருப்பூர் இயற்கை கழகத்தினர் தெரிவித்தனர்.

'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் கீழ் உருவான பசுமை சோலையை, தமிழ்நாடு, காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் முதன்மை செயலர் சுப்ரியா சாஹூ பார்வையிட்டார்.

'வனத்துக்குள் திருப்பூர்' என்ற அமைப்பு, எட்டு ஆண்டுகளாக மரக்கன்று நட்டு வளர்க்கும் பணியை செய்து வருகிறது. வனத்துறை மற்றும் இந்திய மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்துடன் இணைந்து இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர், மங்கலம் பகுதியில் உள்ள சுதன் கார்டனில், 10 ஆயிரம் சவுக்கு மரக்கன்றுகள் நடப்பட்டு, 13 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றை, தமிழ்நாடு, காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் முதன்மை செயலர் சுப்ரியா சாஹூ பார்வையிட்டார். மரம் முறைகளை கேட்டறிந்தார்.

உடன், கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் தீபக் ஸ்ரீவத்சவா, ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவேந்திரகுமார் மீனா, திருப்பூர் ரேஞ்சர் சுரேஷ் கிருஷ்ணா, திருப்பூர் இயற்கை கழகத்தினர் உட்பட வன அலுவலர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us