/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/சோழவரம் - புழல் ஏரிகளின் பேபி கால்வாய்... நாசம்!:ஆகாயத்தாமரை அகற்றி சீரமைக்க எதிர்பார்ப்புசோழவரம் - புழல் ஏரிகளின் பேபி கால்வாய்... நாசம்!:ஆகாயத்தாமரை அகற்றி சீரமைக்க எதிர்பார்ப்பு
சோழவரம் - புழல் ஏரிகளின் பேபி கால்வாய்... நாசம்!:ஆகாயத்தாமரை அகற்றி சீரமைக்க எதிர்பார்ப்பு
சோழவரம் - புழல் ஏரிகளின் பேபி கால்வாய்... நாசம்!:ஆகாயத்தாமரை அகற்றி சீரமைக்க எதிர்பார்ப்பு
சோழவரம் - புழல் ஏரிகளின் பேபி கால்வாய்... நாசம்!:ஆகாயத்தாமரை அகற்றி சீரமைக்க எதிர்பார்ப்பு
ADDED : பிப் 09, 2024 09:18 PM

சென்னையின் குடிநீர் ஆதாரங்களின் ஒன்றான சோழவரம் ஏரி, 1.08 டி.எம்.சி,. கொள்ளளவு கொண்டது.
மழைக்காலங்களில் பூண்டி நீர்த்தேக்கம் மற்றும் கொசஸ்தலை ஆறு வழியாக இந்த ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு தேக்கி வைக்கப்படுகிறது. தேவையின்போது, சோழவரம் ஏரியின் ஷட்டர்கள் திறக்கப்பட்டு, தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்றி பேபி கால்வாய் வழியாக, 4கி.மீ., தொலைவில் உள்ள புழல் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து சென்னை பகுதி மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரி வரை செல்லும் பேபி கால்வாய் உரிய பராமரிப்பு இன்றி கிடக்கிறது. நல்லுார் பகுதியில் கால்வாய் கரைகளின் இருபுறமும் புதர் சூழ்ந்து உள்ளது.
கரையோரங்களில் ஆக்கிரமிப்பு உள்ளது.ஆட்டந்தாங்கலில் இருந்து அலமாதி வரையில் கால்வாய் முழுதும் ஆகாயத்தாமரை சூழ்ந்து பாழாகிவருகிறது. மேலும், கால்வாயின் ஓரங்களில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு, அவை தண்ணீருடன் கலக்கிறது. ஆகாயத்தாமரை, குப்பை மற்றும் புதர்களால் பேபி கால்வாய் பாழாகி வருகிறது.
தற்போது, புழல் ஏரியில் உள்ள தண்ணீர் மட்டுமே சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால், சோழவரம் ஏரியின் தண்ணீர் மேற்கண்ட கால்வாய் வழியாக செல்லவில்லை.
அதே சமயம் கோடைக்காலம் துவங்கிய நிலையில், புழல் ஏரியில் நீர் இருப்பு படிப்படியாக குறையும்போது, சோழவரம் ஏரியின் தண்ணீர் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
அவ்வாறு தண்ணீர் கொண்டு செல்லும் சூழல் ஏற்படும் நிலையில், பராமரிப்பு இன்றி கிடக்கும் மேற்கண்ட கால்வாயால், சீராக செல்வதில் சிக்கல் ஏற்படும். மேலும், கால்வாயில் உள்ள குப்பை கழிவுகளுடன் தண்ணீர் செல்லும்போது, அதை பயன்படுத்தும் பொதுமக்களின் சுகாதாரமும் கேள்விக்குறியாகும்.
உடனடியாக மேற்கண்ட கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
சோழவரம் ஏரியை சுற்றியுள்ள, 3.2 கி.மீ.., தொலைவிற்கு கரைகளில் இருந்த புதர்கள் முழுமையாக அகற்றப்பட்டு, பலப்படுத்தப்பட்டு உள்ளது.
புழல் ஏரியில் போதுமான தண்ணீர் இருக்கிறது. இதனால், தற்போதைக்கு சோழவரம் ஏரியில் இருந்து, பேபி கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு வாய்ப்பு இல்லை.
அப்படியே தண்ணீர் கொண்டு சென்றாலும், ஆகாயத்தாமரைகளால் எவ்வித பாதிப்பும் இருக்காது. அவை தண்ணீரின் மேற்பகுதியில் தான் படர்ந்து இருக்கும்.கால்வாயின் கரை ஓரங்களில் உள்ள செடிகள் மற்றும் ஆகாயத்தாமரைகளை அகற்றுவது, அக்டோபர் மாதங்களில் தான் நடைபெறும்.
கால்வாயில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க, அந்தந்த ஊராட்சி நிர்வாகங்களிடம் கடிதம் அளித்து உள்ளோம். மீண்டும் அவர்களுக்கு அறிவுறுத்தப்படும். குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.