/உள்ளூர் செய்திகள்/தேனி/எதிர்பார்ப்பு பட்டுக் கூடு விலை உயருமா விவசாயிகள்விலை குறைவால் சாகுபடி பாதிக்கும் நிலைஎதிர்பார்ப்பு பட்டுக் கூடு விலை உயருமா விவசாயிகள்விலை குறைவால் சாகுபடி பாதிக்கும் நிலை
எதிர்பார்ப்பு பட்டுக் கூடு விலை உயருமா விவசாயிகள்விலை குறைவால் சாகுபடி பாதிக்கும் நிலை
எதிர்பார்ப்பு பட்டுக் கூடு விலை உயருமா விவசாயிகள்விலை குறைவால் சாகுபடி பாதிக்கும் நிலை
எதிர்பார்ப்பு பட்டுக் கூடு விலை உயருமா விவசாயிகள்விலை குறைவால் சாகுபடி பாதிக்கும் நிலை
ADDED : பிப் 10, 2024 05:42 AM

தேனி: பட்டுக்கூடு விலை குறைந்தால் விவசாயிகள் நஷ்டம் அடைவதால் பட்டுப்புழு வளர்ப்பை குறையும் நிலை உருவாகி உள்ளது.
தேனி மாவட்டத்தில் கொடுவிலார்பட்டி, உப்புக்கோட்டை சின்னமனுார் உள்ளிட்ட பல பகுதிளில் விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். பட்டுப்புழு வளர்ப்பில் மாநிலத்தில் தேனி இரண்டாம் இடத்தில் உள்ளது. மாவட்டத்தில் 1257 விவசாயிகள் 2603 ஏக்கரில் மல்பெரி சாகுபடி செய்து பட்டுப்புழு வளர்ந்து பட்டுக்கூடு உற்பத்தியும் செய்கின்றனர். இங்கு வி1, எம்.ஆர்., 2 வகை மல்பெரியும், வெண் பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது.
இளம்பட்டுப்புழுக்களை பழனி தொப்பம்பட்டி, உடுமலைப்பேட்டை, தேனி லட்சுமிபுரத்தில் செயல்படும் இளம்புழு வளர்ப்பு மையங்களில் இருந்து வாங்கி அதனை வளர்த்து பட்டுக்கூடு உற்பத்தி செய்கின்றனர். இதனை தேனி, சிவகங்கை, கோவையில் உள்ள பட்டுக்கூடு மார்கெட்டுகளில் விற்பனை செய்கின்றனர். தற்போது வெண் பட்டு கூடுகள் கிலோ ரூ.380 முதல் ரூ.460 வரை விற்பனை ஆகின்றன. கடந்தாண்டுகளை விட தற்போது பாதி விலைக்கு கொள்முதல் செய்வதால் விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப்பை கைவிடும் நிலை உருவாகி உள்ளது.
ஊக்க தொகை வேண்டும்
சீனிராஜ், விவசாயி,கொடுவிலார்பட்டி: மல்பெரி விவசாயம், பட்டுக்கூடு உற்பத்தி செய்ய ஒரு ஏக்கருக்கு இடுபொருள் செலவு, ஆட்கள் சம்பளம், பராமரிப்பு என ரூ.22 ஆயிரம் வரை செலவாகிறது. சில ஆண்டுகளுக்கு முன் பட்டு கூடு ரூ.700 வரை விற்பனை ஆன போது ஏக்கருக்கு வருவாய் ரூ. 60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் கிடைத்தது. தற்போது பட்டுக்கூடு விலை ரூ.350 முதல் 400 க்குள் கொள்முதல் செய்வதால் நஷ்டமடையும் நிலை உள்ளது. எனவே பட்டுபுழு விசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கவும், இடுபொருள் மானியத்தை அதிகரிக்க வேண்டும்.
விலை உயர வாய்ப்பு
பட்டுவளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், கொரோனாவிற்கு பின் வெளிநாட்டு நிறுவனம் அனைத்து பட்டுக்கூடுகளையும் அதிக விலைக்கு கொள்முதல் செய்தது. கடந்த ஓராண்டிற்கு மேலாக அந் நிறுவனம் கொள்முதல் செய்வதை நிறுத்தி உள்ளன. இதனால் பட்டுக்கூடு விலை சரிந்துள்ளது. இந்தியாவின் சில்க் மார்கெட் என அழைக்கப்படும் பெங்களூரு ராமநகர் மார்க்கெட்டில் வெண் பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.525க்கு விற்பனை ஆகிறது. மாவட்டத்தில் பனி தாக்கம் குறைகின்ற போது தரமான கூடுகள் உற்பத்தி அதிகரிக்கும். இம்மாத இறுதியில் பட்டுக்கூடு விலை உயர வாய்ப்புள்ளது என்றனர்.