/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மீன் மார்க்கெட்டில் அதிகாரிகள் சோதனைமீன் மார்க்கெட்டில் அதிகாரிகள் சோதனை
மீன் மார்க்கெட்டில் அதிகாரிகள் சோதனை
மீன் மார்க்கெட்டில் அதிகாரிகள் சோதனை
மீன் மார்க்கெட்டில் அதிகாரிகள் சோதனை
ADDED : பிப் 10, 2024 04:29 AM
தேவிபட்டினம்: மாவட்டத்தில் வேதிப்பொருட்கள் கலந்த, கெட்டுப் போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக புகாரை தொடர்ந்து தேவிபட்டினம் மீன் மார்க்கெட்டில் மண்டபம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கவேல் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மார்க்கெட்டில் உள்ள மீன்களை ஆய்வு செய்தனர்.
பயன்படுத்த முடியாத நிலையில் கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மீன் விற்பனை செய்யும் தொழிலாளர்களுக்கு மீன்களை பாதுகாப்பான முறையில் பதப்படுத்துவது குறித்தும், முறையாக விற்பனைக்கு சந்தைப்படுத்துதல் குறித்தும் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விளக்கினர்.
ஆய்வின்போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கருணாநிதி, தர்மர் கலந்து கொண்டனர்.