/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/2,571 மையங்களில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்2,571 மையங்களில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்
2,571 மையங்களில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்
2,571 மையங்களில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்
2,571 மையங்களில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்
ADDED : பிப் 09, 2024 11:05 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணி நேற்று துவங்கியது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லுாரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 2,571 மையங்களில் வழங்கப்பட்டது.
ஒன்று முதல் 19 வயதுக்குட்பட்ட 4 லட்சத்து 48 ஆயிரத்து 969 நபர்களுக்கும், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட ஒரு லட்சத்து ஆயிரத்து 795 பெண்கள் என மொத்தம் 5 லட்சத்து 50 ஆயிரத்து 764 பேருக்கு 'அல்பெண்டாசோல்' மாத்திரைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஒன்று முதல் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 200 மி.கி., மாத்திரையும், 2 முதல் 19 வயதிற்குட்பட்டவர்களுக்கு 400 மி.கி., மாத்திரை, 20 முதல் 30 வயது பெண்களுக்கு ஒரு மாத்திரையும் வழங்கப்பட்டது.
குடற்புழு நீக்கத்தால் குழந்தைகளுக்கு ரத்த சோகையை தடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சி மேம்படுகிறது. பொது சுகாதாரத் துறையுடன் பள்ளிக்கல்வித் துறை, ஊட்டச்சத்து துறை ஊழியர்கள் ஒருங்கிணைந்து இப்பணிகளை மேற்கொண்டனர்.