Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/செல்லமே/பிப்.,14: 'லவ்' பண்ணுங்க... பண்ணிகிட்டே இருங்க!

பிப்.,14: 'லவ்' பண்ணுங்க... பண்ணிகிட்டே இருங்க!

பிப்.,14: 'லவ்' பண்ணுங்க... பண்ணிகிட்டே இருங்க!

பிப்.,14: 'லவ்' பண்ணுங்க... பண்ணிகிட்டே இருங்க!

UPDATED : பிப் 10, 2024 10:05 AMADDED : பிப் 10, 2024 09:43 AM


Google News
அன்பு காட்டுவோம் அன்பை பகிர்ந்து ஆராதிப்பதற்கான தினம், பிப்.,14

Image 3547733

'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்றார், வள்ளலார் பெருமகனார். இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிர் மீதும் நாம் அன்பு பகிர வேண்டுமென்று பறைசாற்றும் இவ்வாசகம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. அவ்வகையில், நமக்காக உயிரையே தரத்துணியும் செல்லப்பிராணிகள் மீது பேரன்பு செலுத்தி கொண்டாடுவோமென முழங்குகின்றனர் 'பெட்' ஆர்வலர்கள்!

'பெட்'களின் பிறந்த நாள், நமக்கான பிறந்த நாள் உள்ளிட்ட கொண்டாட்டங்களின் போது, அவற்றுக்கு எதைத் தரவேண்டும்; எதை தரக்கூடாது என்பதை நாம் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். பிரியமானவர்களின் நலனில் அக்கறை காட்டிட தவறிவிடக்கூடாதல்லவா... அதற்கான டிப்ஸ் இதோ:

Image 1230247

ஸ்வீட் எடு; கொண்டாடுங்கற டயலாக் பெட்ஸ்களுக்கு பொருந்தாது. குறிப்பா நாய், பூனைகள், சாக்லெட் சாப்பிட்டா, அது விஷமாகிடும். இதேபோல, சில துளி ஆல்கஹால், பெட்ஸ் சாப்பிட்டா கூட இறப்பை ஏற்படுத்தும் அளவுக்கு, மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்கின்றனர், கால்நடை மருத்துவர்கள்.

அன்பை பரிமாறி கொள்ளவும் செலிபிரேட் செய்யவும், வீட்டை டெக்கரேட் செய்வது, போட்டோஷூட் நடத்துவது டிரெண்டாகி வருகிறது. ஆனால், செலோடேப், கத்திரிக்கோல், கலர் பேப்பர்ஸ், ஆகியவை உங்க வீட்டு பெட்ஸ்சின் கால்களிலோ, நகங்களிலோ சிக்கி கொள்ளாமல் பார்த்து கொள்வது அவசியம்.

உங்கள் அன்புக்குரியவர்களிடம் இருந்து 'வேலன்டைன் டே'ல பெறும் பூக்கள், பொக்கே ஆகியவற்றை, பெட்ஸ்கள் தொட முடியாத உயரத்தில் வைப்பது அவசியம். குறிப்பாக பூனைகள், இத சாப்பிட்டால், கிட்னிக்கு ஆபத்தாம்.

Image 1230248

பெட்ஸ்களுக்கு கொடுக்கறதுக்குன்னு நிறைய வெரைட்டி டிரீட்ஸ் கடைகளில் கிடைக்குது. இதோட அவை ஹெல்தியா, 'பிட்'டா இருக்க உப்பு சேர்க்காமல் சிறிது மஞ்சள் துாள் கலந்து, காய்கள், சிக்கன், மட்டன், முட்டையோட நிறைய அன்பையும் சேர்த்து, சமைத்து கொடுத்து அசத்தலாம்.

வீட்டுக்குள்ளே இருக்கற பெட்ஸ்களை பிக்னிக் கூட்டிட்டு போகலாம். வெளியிடங்களுக்கு டிராவல் செய்தால், அவை குஷியாகிடும். பெட்ஸ்களுக்கென பிரத்யேக ரெசார்ட்ஸ்சும் இருக்கு. முன்கூட்டியே புக்கிங் செய்து, ஊர் சுற்ற கிளம்பலாம்.

வேலன்டைன் தீம் கொண்ட டிரஸ், கேப், கூலர்ஸ் என எக்கச்சக்க பொருட்கள் கடைகளில் விற்பனைக்கு வந்துவிட்டது. உங்க செல்லத்துக்கு கிப்ட் கொடுத்து சர்பிரைஸ் பண்ணுங்க. அதோட சேட்டைய பார்த்து என்ஜாய் பண்ணுங்க.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us