அமைச்சர்கள் வருகை; அகற்றப்பட்ட மரங்கள்
அமைச்சர்கள் வருகை; அகற்றப்பட்ட மரங்கள்
அமைச்சர்கள் வருகை; அகற்றப்பட்ட மரங்கள்
UPDATED : பிப் 10, 2024 04:54 AM
ADDED : பிப் 10, 2024 01:54 AM

அன்னுார்:திருப்பூர் மாநகராட்சி நான்காவது கூட்டுக் குடிநீர் திட்டம் 1191 கோடி ரூபாயில் நடந்து வருகிறது. இதன் துவக்க விழா நாளை திருப்பூரில் நடக்கிறது. அமைச்சர்கள் உதயநிதி நேரு உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர். இதற்காக குருக்கிளையம்பாளையத்திலிருந்து சுத்திகரிப்பு நிலையம் செல்லும் பாதையில் உள்ள இரு மரங்கள் நேற்று மதியம் வெட்டி அகற்றப்பட்டன.
இதுகுறித்து பசுமை ஆர்வலர்கள் கூறியதாவது:
மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து சுத்திகரிப்பு நிலையம் செல்லும் வழியில் மரங்கள் இடையூறு இல்லாமல் உள்ளன. ஆனால் அமைச்சர்கள் வருகையின் போது இடையூறாக இருக்கும் என்று கருதி மரங்களை வெட்டி அகற்றி உள்ளனர்.
இந்த மரங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிழல் தந்து மழை தந்து பசுமையை பரப்பிக் கொண்டிருந்தன. ஏற்கனவே இந்த திட்டத்திற்காக மேட்டுப்பாளையத்தில் துவங்கி அவிநாசி வரை 300க்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றப்பட்டன.
அதற்கு பத்து மடங்கு மரங்கள் நடப்படவில்லை. இந்நிலையில் அமைச்சர்கள் இங்கு வரக்கூடும் என்பதற்காக மரங்களை வெட்டி அகற்றி உள்ளனர்.
இவ்வாறு கூறினர்.
திருப்பூர் மாநகராட்சி ஆய்வாளர் செல்வக்குமார் கூறுகையில் ''மரங்களை வெட்டி அகற்றுவதற்கு வருவாய்த் துறையில் அனுமதி பெற்றுள்ளோம்'' என்றார்.