/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சரநாராயண பெருமாள் பழபந்தலில் அருள்பாலிப்புசரநாராயண பெருமாள் பழபந்தலில் அருள்பாலிப்பு
சரநாராயண பெருமாள் பழபந்தலில் அருள்பாலிப்பு
சரநாராயண பெருமாள் பழபந்தலில் அருள்பாலிப்பு
சரநாராயண பெருமாள் பழபந்தலில் அருள்பாலிப்பு
ADDED : பிப் 10, 2024 06:26 AM

பண்ருட்டி : பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு மூலவர் சரநாராயண பெருமாள் வேணுகோபாலன் அலங்காரத்தில் பழபந்தலில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று வெள்ளிக்கிழமை தை அமாவாசையை முன்னிட்டு மூலவர் சரநாராயண பெருமாள் பழபந்தலில் புல்லாங்குழல் பிருந்தாவன் கண்ணனாக வேணுகோபாலன் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
விழாவையொட்டி விஸ்வரூப தரிசனம், சுப்ரபாத சேவை, உற்சவர் பெருமாள் தாயாருடன் உள்புறப்பாடு நடந்து திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
தொடர்ந்து மதியம் உச்சிகால பூஜை. மாலை நடைதிறப்பு, சாயரட்சை பூஜை, இரவு ஏகாந்த சேவை நடந்தது.
விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.