/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/தி.மு.க., நிர்வாகி மீது ரூ.7.50 லட்சம் மோசடி புகார்தி.மு.க., நிர்வாகி மீது ரூ.7.50 லட்சம் மோசடி புகார்
தி.மு.க., நிர்வாகி மீது ரூ.7.50 லட்சம் மோசடி புகார்
தி.மு.க., நிர்வாகி மீது ரூ.7.50 லட்சம் மோசடி புகார்
தி.மு.க., நிர்வாகி மீது ரூ.7.50 லட்சம் மோசடி புகார்
ADDED : பிப் 10, 2024 12:53 AM

பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சுதாகர் மனைவி ரமீலா, 32. இவரது அண்ணன் கனகராஜ் மனைவி ராஜகுமாரி, 28. இருவரும் நேற்று, பெரம்பலுார் மாவட்ட போலீஸ் எஸ்.பி., ஷ்யாம்ளாதேவியிடம் கொடுத்த புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது:
பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்த உறவினரான பச்சமுத்து, 59, தி.மு.க., கிளை செயலராகவும், வி.ஆர்.எஸ்.எஸ்.புரம் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அலுவலராகவும் பணியாற்றி வருகிறார்.
இவர், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 2022 அக்., 27ம் தேதி ரமீலாவிடம், 3.50 லட்சம் ரூபாயும், ராஜகுமாரியிடம் 4 லட்சம் ரூபாயும் வாங்கிக் கொண்டு, இதுவரை வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வருகிறார்.
மேலும், மிரட்டல் விடுத்து வருகிறார். அவரிடம் கொடுத்த பணத்திற்கு வட்டி கட்ட முடியாமல் தவிக்கிறோம். பச்சமுத்து மீது உரிய நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
புகாரை பெற்ற எஸ்.பி., உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.