ADDED : ஜூலை 17, 2011 01:11 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட திருப்பூரை சேர்ந்த மூவரை, போலீசார் கைது செய்தனர்.
பெங்களூருவில் கல்லூரி பேராசிரியராக பணிபுரிபவர் கவிதா (35); பொள்ளாச்சி மகாலிங்கபுரத்திலுள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். கடந்த 13ம் தேதி மகாலிங்கபுரம் ரவுண்டானா வழியாக நடந்து சென்ற போது, காமராஜர் வீதி, பாரதி வீதி சந்திப்பில், இரு சக்கர வாகனத்தில் வந்த மூவர், இவர் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர். இதைக் கண்ட பொதுமக்கள், இவர்களை விரட்டிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், திருப்பூர் அனுப்பர்பாளையம் ஏ.வி.ஆர்., சாலைப் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (23), திருப்பூர் மாநகராட்சி குடியிருப்பை சேர்ந்த ஆனந்தன் (24), மதுரபதியை சேர்ந்த கார்த்திக் (23) என்பதும், ஆனந்தன், திருப்பூர், நம்பியூர் பகுதிகளில் பல வழிப்பறிகளில் ஈடுபட்டதும் தெரிந்தது. இவர்களை கைது செய்த போலீசார், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.