ADDED : பிப் 10, 2024 06:14 AM

புதுச்சேரி: தாவரவியல் பூங்கா மலர் காய் கனி கண்காட்சியில் ருசி ஸ்டாலில் விதவிதமான குல்பி, ஐஸ்கிரீம் வகைகள் புத்துணர்ச்சியுடன் வரவேற்கிறது.
புதுச்சேரி, தாவரவியல் பூங்காவில் நேற்று துவங்கிய முதல் நாள் மலர், காய் கனி கண்காட்சியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
கைநிறைய மலர் செடிகளுடன் வீடு திரும்பும் பொதுமக்களை மணக்க மணக்க வரவேற்க புட் கோர்ட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புட் கோர்டின் குளிர்பான அரங்கில் இடம் பெற்றுள்ள 'ருசி' ஸ்டாலில் விதவிதமான சுவையில் குல்பி, ஐஸ்கிரீம் வகைகள் புத்துணர்ச்சியுடன் வரவேற்கிறது. ஒவ்வொரு குல்பி, ஐஸ்கீரிம் வகைகளும் நாவில் எச்சில் ஊற வைத்துவிடும். 20 ரூபாய்க்கு கிடைக்கும் நட்ஸ் கலந்த ருசியான குல்பி தனித்துவமான சுவையில் உங்களை மூழ்கடித்துவிடும்.
அசத்தலான வெண்ணிலா, பட்டர்ஸ்காட்ச் ஐஸ்கீரிம்களை வாங்க குட்டீஸ்கள் ருசி ஸ்டால்களை மொய்த்து வருகின்றனர்.
கையில் யுவதிளும் குல்பியுடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகின்றனர்.
கண்காட்சிக்கு போறவங்க அப்படியே ருசி ஸ்டாலுக்கு போயிட்டு வாங்க... செல்பியுடன் உற்சாகமான புத்துணர்ச்சிக்கு உத்தரவாதம்.