ADDED : பிப் 09, 2024 11:41 PM

புதுச்சேரி: இந்திய கம்யூ., தட்டாஞ்சாவடி தொகுதி குழு சார்பில், அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
புதுச்சேரி மாநிலத்தில், இந்திய கம்யூ., சார்பில், மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்து, காரைக்கால், மாகி உள்பட, 18 மையங்களில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இ.கம்யூ., தட்டாஞ்சாவடி தொகுதி குழு சார்பில், அரசியல் விளக்க பொதுக்கூட்டம், பாக்கமுடையான்பட்டு ஜீவா காலனி அருகில் நடந்தது.
தொகுதி செயலாளர் தென்னரசன், மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முருகன், மாநில குழு உறுப்பினர் எழிலன், தொகுதி துணை செயலாளர் மூர்த்தி, பொருளாளர் தனஞ்செழியன் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் சலீம், மாநில துணைச்செயலாளர் சேதுசெல்வம், சிறப்புரையாற்றினர். கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.