Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இனி 'ஆன்லைன்' வழி பயிற்சி

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இனி 'ஆன்லைன்' வழி பயிற்சி

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இனி 'ஆன்லைன்' வழி பயிற்சி

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இனி 'ஆன்லைன்' வழி பயிற்சி

UPDATED : பிப் 10, 2024 07:40 AMADDED : பிப் 10, 2024 07:04 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை:பள்ளிக்கல்வி செயலர் குமரகுருபரன் பிறப்பித்து உள்ள அரசாணை:

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கான கற்பித்தல் குறித்த பயிற்சியானது, மாவட்ட, மாநில அளவில் சில பயிற்சி மையங்களில் வழங்கப்படு கிறது. இதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.

பயிற்சி பெறுவோர், உணவு, உறைவிட வசதிகளுக்காக, மையங்களில் இருந்து நீண்ட துாரம் செல்ல வேண்டியுள்ளது. பயிற்சி மையங்களுக்கு ஆசிரியர்கள் செல்வதால், பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது.

எனவே, இனி நேரடி பயிற்சி வழங்காமல், அந்தந்த பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் இருந்து, 'ஆன்லைன்' வழியில் நடத்தப்பட வேண்டும். வரும் கல்வி ஆண்டில், 75 சதவீத பயிற்சிகளை, ஆன்லைனில் மட்டுமே நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us