/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோலாகலமாக துவங்கியது மாசாணியம்மன் குண்டம் விழா கோலாகலமாக துவங்கியது மாசாணியம்மன் குண்டம் விழா
கோலாகலமாக துவங்கியது மாசாணியம்மன் குண்டம் விழா
கோலாகலமாக துவங்கியது மாசாணியம்மன் குண்டம் விழா
கோலாகலமாக துவங்கியது மாசாணியம்மன் குண்டம் விழா
ADDED : பிப் 09, 2024 11:37 PM

ஆனைமலை;ஆனைமலை மாசாணியம்மன் கோவில் திருவிழா, கொடியேற்ற நிகழ்ச்சியுடன் நேற்று துவங்கியது. இதை பக்தர்கள் ஆரவாரமாக நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் திருவிழா ஆண்டு தோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தை மாதம் அமாவாசை தினத்தில் கொடியேற்றத்துடன் துவங்கி, 18 நாட்களுக்கு, இத்திருவிழா பக்தர்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
நடப்பாண்டு கோவில் திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. வழக்கத்தை விட அதிகளவு பக்தர்கள் திரண்டனர். கொடிக்கம்பம் வரும் போது, மேளதாளங்கள் முழங்கியது; அந்த இசைக்கேற்ப பக்தர்கள் நடனமாடி மகிழ்ந்தனர்.
மேலும், கொடிக்கம்பம் நடுவதற்கு முன், வானில் ஆறு கருடன்கள் தொடர்ந்து சில நிமிடங்கள் வட்டமிட்டதை கண்ட பக்தர்கள் பரவசமடைந்தனர். தாயே, மாசாணி தாயே என கோஷங்களை எழுப்பி வணங்கினர்.
கம்பத்தில் கட்டுவதற்காக பலரும் புடவை, மாலை உள்ளிட்டவை வழங்கினர். மேலும், கொடிக்கம்பம் நடும் போது பகர்தள் சிலருக்கு அருள் வந்தது. கோலாகலமாக கொடியேற்று விழா நடந்தது.
கொடிக்கம்பம் நடப்பட்ட பின், நீண்ட வரிசையில் நின்று சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை பக்தர்கள் தரிசித்தனர். கோவில் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் சார்பிலும், ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.