/உள்ளூர் செய்திகள்/சென்னை/அரசு தேர்வில் 25 சதவீதம் ஒதுக்கீடு கோரிக்கைஅரசு தேர்வில் 25 சதவீதம் ஒதுக்கீடு கோரிக்கை
அரசு தேர்வில் 25 சதவீதம் ஒதுக்கீடு கோரிக்கை
அரசு தேர்வில் 25 சதவீதம் ஒதுக்கீடு கோரிக்கை
அரசு தேர்வில் 25 சதவீதம் ஒதுக்கீடு கோரிக்கை
ADDED : பிப் 10, 2024 12:22 AM
வியாசர்பாடி, தமிழ்நாடு திருக்கோவில் தொழிலாளர்கள் யூனியனின் சென்னை கோட்ட நிர்வாகிகள் கூட்டம், நேற்று நடந்தது.
இதில், திருக்கோவில் பணியாளர்களை முழு நேர அரசு ஊழியராக்க வேண்டும்; விதி எண் - 110ன் கீழ் தினக்கூலி தொகுப்பு ஊதியம் பெறும் அன்னதானப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
பணியாளர்களுக்கு நிலை- நான்கு செயல் அலுவலர் பணிகளுக்கு, 25 சதவீதம் இட ஒதுக்கீடு அரசாணையை, விரைவில் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சென்னை யூனியன் கவுரவ தலைவர் வேலாயுதம், கோட்ட தலைவர் தனசேகர், செயலர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.